Thursday, August 17, 2017

என்ன சமையலோ???!!!!

பெண்ணீய பதிவெல்லாம் இல்லீங்க ஆனா எதார்த்தமான பதிவுன்னு சொல்லிக்கிட்டு ஆரம்பிக்கறேன். பிடிக்குதோ பிடிக்கலையோ சமையல் செஞ்சே ஆக வேண்டிய கட்டாயம் பலருக்கு உண்டு. விரும்பி வகையா சமைச்சு அசத்தறவங்க இருக்காங்க. எங்க அம்மம்மா சொல்வது போல எந்த வேலையையும் மனசு ஒப்பி செய்யணும் அப்பதான் அது நல்லா இருக்கும்.

ஆனா இந்த சமையல் வேலை பெண்களை அடுப்படியோ கட்டி வெச்சிருச்சுன்னு சொல்லலாம்.  முடியுதோ முடியலையோ ஆனா சமைச்சு தான் ஆகணும் என்பது கட்டாயம். இங்க்லிஷ் விங்கிலிஷ் படத்துல ஒரு காட்சி ஸ்ரீதேவி தன்னுடன் ஆங்கிலம் பயிலும் நண்பரிடம் கேட்பதாக இருக்கும்,” ஆண்கள் சமைத்தால் அது ஒரு கலை பெண்கள் சமைத்தால் அது பெரிய விஷயமில்லை” என்பது போல அதற்கு நண்பர் தரும் பதில் உளப்பூர்வாமாக நீங்கள் சமைப்பதுதான் ருசியாய் இருக்கும்,

நல்லா ருசியா வகை வகையா சமைப்பேன். ரொம்ப பிடிச்ச விஷயம் சமையல்னு சொல்லலாம். ஆனா சமீபகாலமா சமையற்கட்டு பக்கம் போகணும்னாலே அழுவாச்சி தான். வேர்க்குதுன்னு இல்லை என் கால் வலி. ரொம்ப ஆசையா சமைச்சிடுவேன். அப்புறம் கால் வலியோட போராட்டம் தான். சேர்ந்தாப்ல அரைமணி நின்னு சமைப்பது சவாலான விஷயம் எனக்கு. சமையலுக்கு ஆள் போடலாம்னா காலை வேளை அவசரத்துக்கு ஆள் கிடைக்க மாட்டாங்க.  இன்னும் கொஞ்ச நாள் போனா கிச்சனுக்கு மூடு விழா நடத்தி ஏதாவது ஒரு செண்ட்ரலைஸ்டு கிச்சன் இருக்கும் இடமா பார்த்து போய் செட்டிலாகிடம்ணு தோணும்.ஆனா இப்ப நிலைமை வேற. ஆனந்தமா அலுங்காம சமையல் நடக்குது. :) கால்வலி குணமாயிடிச்சுன்னு நினைக்கறீங்களா?? அதும்பாட்டுக்கு அது இருக்கு :))  இப்ப சுலபமா சீக்கிரமா சமைக்கும் முறையை கத்துகிட்டாச்சு.
எல்லா சமையலும் குக்கர்லயே. One pot one shot முறையை முகநூல்ல ஒரு குருப்ல பார்த்து கத்துகிட்டேன். OPOS SCHOOL அப்படின்னு முக நூல்ல தேடினா கிடைக்கும் அந்த குருப்ல சேர்ந்தேன். (நம்ம பதிவர் menaga sathiya மூலமாத்தான் இதைப்பத்தி தெரியும்.)

ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்வது போல சமையல் என்பது இனி நேரத்தை விழுங்கும் விஷயமில்லை. பெண்கள் தான் வீட்ல சமைக்கணும்னு இல்லை ஆண்களும் ஈசியா சமைக்கலாம். (சமைப்பதை விட குவியும் பாத்திரம் தான் பிரச்சனையே!! இப்ப பாத்திரங்களும் கம்மி, சிலிண்டரும் நிறைய்ய நாள் வருது, அதிகம் எண்ணெய் இல்லாம சுவையா சமைக்கலாம்). ஒபோஸ் ஸ்கூல் முக நூல் குழுமத்துல பல ஆண்களும் சமைச்சு படங்களை பகிர்வாங்க.

எல்லாத்தையும் அள்ளி போட்டு சமைப்பது கிடையாது இது , ருசிச்சு பார்த்தாதான் இதோட அருமை புரியும். சமையல் குக்கரில் தான். குக்கரை சோறு வடிக்கவும், பருப்பு வேகவும் மட்டுமே நாம உபயோகிச்சிகிட்டு இருந்தோம். இப்ப மைசூர்பாக்குலேர்ந்து எல்லாம் குக்கர்லயே செய்யறாங்க. அதுவும் கிண்டாம, கிளறாம செம ஈசியா. படிக்கக்கும்போதே ஆர்வமா இருக்குல்ல. 

சின்ன சின்ன டெக்னிக்ஸ், சில ஈசி மெத்தட்கள், முறையாக சாமான்களை போடுவதன் மூலம் சீக்கிரத்தில் சமையல் முடிஞ்சிடுது. நெய் கூட குக்கரில் காய்ச்சி இருக்கேன். செமயா இருந்தது. 


செட்டிநாடு காரச்சட்னி செய்முறை ரெசிப்பி கார்ட் கொடுத்திருக்கேன். செஞ்சு பாருங்க. அருமையான ருசி. எல்லோருக்கும் பயனுள்ளதா இருக்கும் என்பதால இந்த பதிவு.

இன்னைக்கு கறிவேப்பிலை காரக்குழம்பு ஓபோஸ் முறையில் செஞ்சேன். வீடே கமகமன்னு இருக்கு. கண்டதிப்பிலி எல்லாம் போட்டு செஞ்சிருக்கேன். 


இது நிஜமாவே சமையலில் ஒரு புரட்சி.